×

இந்து கல்லூரி, பட்டாபிரம், பெட்ரிசியன் கலை கல்லூரி ஆகிய கல்லூரிகளுடன் சமூக தணிக்கை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்: வி.சிவகிருஷ்ணமூர்த்தி, வி.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட  மேம்பாட்டு வாரியம் தலைமை அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட  மேம்பாட்டு வாரியத்துடன் இந்து கல்லூரி, பட்டாபிரம் மற்றும் பெட்ரிசியன் கலை கல்லூரி ஆகிய கல்லூரிகளுடன் சமூக தணிக்கை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப, அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
                    
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற வேண்டும் எனவும் திட்டம் குறித்த செயல்பாடுகளை பயனாளிகளிடம் எடுத்துரைத்து பயனாளிகளின் பங்கினை உணர்த்த வேண்டும் மற்றும் தன்மை மற்றும் தரக் கண்காணிப்பு, திட்டத்தை பற்றிய அனைத்து தகவல்களை பயனாளிகளுக்கு தெரிவித்து, கட்டுமான பணிகளை பயனாளிகள் பார்வையிட செய்ய வேண்டும். இது போன்ற இதர அம்சங்கள் குறித்த சமூக தணிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.    

இதுபோன்ற சமூக தணிக்கை செய்வதன் மூலம் திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை களையவும், உரிய நேரத்தில் திட்டத்தினை முடிக்க உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை  7 திட்டப்பணிகளில் சமூக தணிக்கை செய்ய 6 கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
             
இந்நிகழ்ச்சியில் இணை மேலாண்மை இயக்குநர் திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி இ.ஆ.ப.., வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.வி.பாண்டியன் , வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் திரு.ஜே.ஏ.நிர்மல்ராஜ், இந்து கல்லூரியின் உதவி பேராசிரியர் திரு. ஜெ,ராஜன் , பெட்ரிசியன் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் திருமதி.ஜெ. திவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Colleges of Hindu College ,Patrapram ,Patrician Arts College ,V. Sivakrishnamurthi ,Pandeon Intator , Memorandum of Understanding with Hindu College, Bhattapram and Patrician College of Arts for Community Audit: V. Sivakrishnamurthy, V. Pandian
× RELATED சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!